கஜேந்திரா!
அன்று
உன்னைக் கடவுள் என்றார்கள்
சிரம் தாழ்த்தி வணங்கினோம்
விருந்தளித்தோம்
கருவறையில் வைத்து வழிபட்டோம்
உன் பிறந்தநாளைப் பண்டிகையாய் கொண்டாடினோம்.
ஆனால் இன்று
என் சிரம் தாழ்த்தினேன்
பக்தியில் அல்ல
வேதனையில்!
அன்று
கணேசனுக்குப் பழத்தைக் கொடுத்து
ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள் என்றார்கள்
ஆனால் இன்று
அந்தப் பழத்தைக் கொடுத்தே
உன் உயிரைப் பறிக்கிரார்களே
இது அநீதியன்றோ!
இன்று, இந்தக் கொரோனா வைரஸால் பேரழிவைச் சந்திக்கிறான் மனிதன்
ஆனால் உம் போன்ற உயிர்களுக்கு
மிகப்பெரிய வைரஸாகத் திகழ்வது
இந்த மனிதர்களே அன்றோ!
😕
ReplyDelete