குளத்தில் இருக்கும் நீர் ஆவியாகி வானிற்குச் செல்லும் போது எனக்குத் தெரியாது.... அது அழகான மழைத் துளியாக பூமிக்கு திரும்பி வரும் என்று பெண்ணே! நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றதும் அந்த மழைத் துளியைப் போல அழகாகி என்னிடம் திரும்பி வருவதற்கு தானோ? பூக்களில் உள்ள தேனைத் தேனீக்கள் உறிஞ்சி எடுத்து விடும் என்பதை அறிந்தும் அந்த பூக்கள் ஒரு நாளும் தேனினைச் சுரக்க மறுத்ததில்லை. அது போல தான் நீ என்னை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும் உன் மீது அன்பு வைக்க என் மனம் மறுக்க வில்லையோ!
Welcome to my blog my dear readers !! Do subscribe to my blog and comment your views. Poems,articles,short stories,social messages and many more...